மன்னார், மாந்தை சந்தியில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு, மன்னார் பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதி, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் கையெழுத்திட்ட கடிதம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கடந்த 14ஆம் திகதி வழங்கப்பட்ட இந்த அனுமதியின் பின்னர், பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதையடுத்தே, பிரதேச சபை எல்லைக்குள் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்தும் வரை, தன்னால் வழங்கப்பட்ட அனுமதி, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அக்கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்