நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அரசமைப்பின் 18, 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.