பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமைகள் மனு அடுத்த மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமை சட்டவிரோதமானதெனவும், இதனூடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தன்னை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதைத் தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவானது பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ.பி. தெஹிதெனிய, எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் குழாமால் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அடுத்த மாதம் 31ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது