குடிவரவு-குடியகல்வு சட்டதிட்டங்களை மீறி, இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 7000க்கும் அதிகமானவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, சட்டவிரோதமாக இலங்கையில் இவர்கள் தங்கியிருப்பதாகவும் இதில் அதிகமானோர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களென, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுபாட்டு பணிப்பாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன் குடியுரிமை வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, வீசா காலம் நிறைவடைந்தவர்களும் இந்த 7000 பேரில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.