ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டங் லாய் மார்க் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

இதன்போது நடப்பு அரசியல் சூழ்நிலைகள் மற்றும் இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த 7 ஆண்டுகால வேலைத்திட்டங்கள் குறித்து பேசப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் தமது டுவிட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளது.