உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை , பிராதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டப் போதே, இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இன்றைய தினம் சஹ்ரானின் மனைவியுடன் அவரது மகளும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். சாய்ந்தமருதில் சஹ்ரான் குழு தங்கியிருந்தபோது அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் சிலருக்கு பணம் விநியோகித்ததாகவும் அவர்களை அடையாளம் காட்ட முடியுமென்றும் சஹ்ரானின் மனைவி கூறியதையடுத்தே அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.