ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்ய கடந்த வாரம் புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்தது. எவ்வாறாயினும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்த பின் வேலைநிறுத்தம் செய்யும் புகையிரத ஊழியர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும் என போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.