யாழ். அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்தின் 51ஆவது ஆண்டு விழாவும், தந்தை செல்வா சனசமூக நிலைய வீதி திறப்பும், மின் கட்டமைப்பு வழங்கலும் இன்றுமாலை நடைபெற்றது.

இதன்கீழ் அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதிமூலம் மேற்படி பூரணப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 5.5மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் இந்த கிராமத்தில் மாத்திரம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மைதானம் புனரமைக்கப்பட்டு, மின்சார வசதி வழங்கப்பட்டதோடு, சனசமூக நிலைய வீதியும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. செல்வநாயகபுரம் கிராமம் ஆரம்பிக்கப்பட்டு 51ஆவது ஆண்டினை முன்னிட்டு இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலானந்தன், வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன், அச்சுவேலி மேற்கு கிராம சேவையாளர் வீ.கோபாலதாஸ், அச்சுவேலி மேற்கு சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.