கிளிநொச்சியில் நேற்றுமாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். விபத்தில் இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த டெக்டருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பின்புறமாக பார்த்தவாறு பயணித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.