யாழ். சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய அன்னதான மண்டபத்திற்கான அத்திரவாரக்கல் நாட்டும் வைபவம் இன்றுபிற்பகல் இடம்பெற்றது.

புளொட் தலவைரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய நிகழ்வில் முன்னாள் மாகாசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிகோ, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர் ந.கணேந்திரன், ஆசிரியர் இதயராஜ், செல்வக்குமார், ஆலய தலைவர் தெனிசன், ஆலய பூசாரியார் பரமநாதன் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும், ஊர் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.