யாழ். நவாலி அட்டகிரி கந்தசாமி ஆலய சுற்றுவீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமாலை 4.30மணியளவில் இவ்வீதி புனரமைப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், முன்னாள் ஆசிரியர் செல்வராஜா மற்றும் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.