யாழ். மானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 5லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நேற்றுமாலை 5.30மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், முன்னாள் ஆசிரியர் செல்வராஜா மற்றும் பயனாளிகள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.