இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா – வன், வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக, ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள விண்ணுக்கு, இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பலாங்கொடை – பெலிஹ_ல்ஓயா பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற பேஸ்புக் பயனாளிகள் சிலரின் சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் போது, 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின்னல் தாக்கியதில் விவசாயியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டினுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இந்திய பிரதமர் நரேந்திர் மோடி இலங்கைகு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தையடுத்து 160 இந்திய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 


