யாழ். அரியாலை சக்தி கலாச்சார அபிவிருத்தி மன்றத்தின் 17ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (30.06.2019) மாலை 4.00மணியளவில் நல்லூர் திவ்ய ஜீவன மண்டபத்தில் மன்றத்தின் தலைவர் செல்வி சனுஜா இராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றியத்தலைவர் கலாநிதி து.கு. ஜெகதீஸ்வரக்குருக்கள் கலந்துகொண்டு ஆசியுரையினை வழங்கியிருந்தார். மேலும் சிறப்பு விருந்தினராக த.தனதீசன் (சுடர்நிலா புத்தகசாலை) கலந்துகொண்டிருந்ததோடு,கௌரவ விருந்தினர்களாக சிரேஸ்ட குடும்பநல உத்தியோகத்தர் (யாழ். மாநகரசபை) திருமதி பவானி, குடும்பநல உதவியாளர் (யாழ். மாநகரசபை) செல்வி .பொ.சந்திரிக்கா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.

வரவேற்புரையினை செல்வி இராசேந்திரம் லக்ஸ்மியோ ஆற்றினார். வரவேற்பு நடனம், தலைமையுரை இடம்பெற்று பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இதனையடுத்து நினைவுப்பரிசில் வழங்கலும், பரிசளிப்பும் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.