யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கான சுற்றுவீதி (கார்ப்பெட்) அமைக்கும் வேலைகள் இன்று (01.07.2019) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட விசேட நிதியான 02கோடியே 80லட்சம் ரூபாயில் மேற்படி கார்பெட் வீதி அமைக்கப்படுகின்றது.

புதிய சுற்று வீதிக்கான வேலைகளை ஆரம்பிப்பதற்காக இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கலாநிதி ஆறுதிருமுருகன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கோப்பாய் பிரதேசசபை உறுப்பினர் இ.செல்வராஜா மற்றும் ஆலய குருக்கள், ஆலய பரிபாலன சபையினர், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.