தந்தை செல்வா கலையரங்க திறப்புவிழா நிகழ்வு இன்று (01.07.2019) திங்கட்கிழமை முற்பகல் 10மணியளவில் யாழ். ராஜேந்திரபிரசாத் வீதியில் அமைந்துள்ள யாழ். மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

மேற்படி கலையரங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் இன்றுமுற்பகல் திறந்துவைக்கப்பட்டது. மேற்படி திறப்புவிழா நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முனைவர் அருகோபாலன், தமிழரசுக் கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபை அங்கத்தவர்கள், பாடசாலைச் சமூகத்தினர், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.