யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காடு அரசடியம்மன் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நேற்று (30.06.2019) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் மேற்படி வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், இளைஞர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.