Header image alt text

நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குடிபோதையில் இருந்த சேவையாளர் சம்பந்தமாக புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு வேலைநிறுதத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக எவ்வித காரியாலய புகையிரதங்களும் இன்று சேவையில் ஈடுபடவில்லை. Read more

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அன்சார் மொஹமட் ரினாஸ் என்ற நபரே பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன், நுவரெலியாவில் பயிற்சி பெற்ற நபர் என்று தெரிய வந்துள்ளது. Read more

மட்டு.நகரில் பதற்றம்-

Posted by plotenewseditor on 4th July 2019
Posted in செய்திகள் 

மட்டக்களப்பு, புதுநகர், திமிலைதீவு பகுதியில் இன்று காலை போக்குவரத்து பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,

அங்கு மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்ற இருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கைத்துப்பாக்கியை ஒருவர் பறித்துச் சென்றதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மட்டு.தலைமையக பொலிஸ் பிரிவின் கீழுள்ள புதுநகர், திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் இன்று காலை 11 மணியளவில் வீதி போக்குவரத்து பொலிஸார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். Read more

 தாண்டிக்குளம் பகுதியில்  இன்று (04) காலை  09.52 மணியளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. சில விநாடிகள் இதை தாம் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்துடன் வீட்டின் யன்னல், கதவுகள் உட்பட அனைத்தும் நிலநடுக்கத்தால் அதிர்வடைந்ததாகத் தெரிவித்தனர்.

எனினும், எந்தவொரு ​உயிர் ஆபத்துகளும் இடம்பெறாத நிலையில், குறித்த நிலநடுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் மேலதிக ஆய்வுகளை மேற்​கொண்டு வருவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.