நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குடிபோதையில் இருந்த சேவையாளர் சம்பந்தமாக புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு வேலைநிறுதத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக எவ்வித காரியாலய புகையிரதங்களும் இன்று சேவையில் ஈடுபடவில்லை.எவ்வாறாயினும் புகையிரத தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது.

இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடத் தீர்மானித்ததாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வேலை இடைநிறுத்தம் செய்யபட்டுள்ள ஊழியரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளர் புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தே வேலைநிறுதத்தில் ஈடுபட்டனர்.