தாண்டிக்குளம் பகுதியில் இன்று (04) காலை 09.52 மணியளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. சில விநாடிகள் இதை தாம் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்துடன் வீட்டின் யன்னல், கதவுகள் உட்பட அனைத்தும் நிலநடுக்கத்தால் அதிர்வடைந்ததாகத் தெரிவித்தனர்.
எனினும், எந்தவொரு உயிர் ஆபத்துகளும் இடம்பெறாத நிலையில், குறித்த நிலநடுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.