Header image alt text

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்குப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

வலிகாமம் வடக்கு – காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார்க் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்பகட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன், நேற்று (04) ஆரம்பமாகின. Read more

சர்வதேசப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து, இந்தியாவுக்கான முதலாவது விமானச் சேவை, ஓகஸ்ட் மாதம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மூன்றாவது பன்னாட்டு விமான நிலையமாக, பலாலி விமானச் நிலையத்தை அபிவிருத்திச் செய்யும் பணிகள், இன்று வெள்ளிக்கிழமை (05), சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன. Read more

அமெரிக்க மாத்திரமன்றி, உலகின் எந்தவொரு நாடும், இலங்கைக்குள் எந்தவொரு படை முகாமை​யும் அமைக்க முடியாதெனவும் அதற்கு ​ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைக்குள் படைமுகாம் ஒன்றை அமைக்கும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும், ஐக்கிய அமெரிக்கக் குடியரசுடன் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றும் இது தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அவர் சுட்டிக்காட்டி​னார். Read more