அமெரிக்க மாத்திரமன்றி, உலகின் எந்தவொரு நாடும், இலங்கைக்குள் எந்தவொரு படை முகாமை​யும் அமைக்க முடியாதெனவும் அதற்கு ​ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைக்குள் படைமுகாம் ஒன்றை அமைக்கும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும், ஐக்கிய அமெரிக்கக் குடியரசுடன் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றும் இது தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அவர் சுட்டிக்காட்டி​னார்.விசேடமாக, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள, அரசாங்கம் தயாரில்லை என்றும் தெரிவித்த அமைச்சர், இவ்வாறான ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் உறுதிப்படுத்தி உள்ளாரெனச் சுட்டிக்காட்டினார்.