நாட்டின் மூன்றாவது பன்னாட்டு விமான நிலையமாக, பலாலி விமானச் நிலையத்தை அபிவிருத்திச் செய்யும் பணிகள், இன்று வெள்ளிக்கிழமை (05), சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன் நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜங்க அமைச்சர் கௌரவ அசோக் அபேசிங்க கல்வி இராஜங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன்,மாவை சேனாதிராஜா ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.சுமார் 19.5 பில்லியன் ரூபாய் செலவில், பிராந்திய விமானச் சேவைகளை நடத்தக்கூடிய வகையில், பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இரு கட்டங்களாக, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வதே, இதன் முதற்கட்டப் பணிகளாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த விமான நிலையம், கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்தவுடன், இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படும். பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை, 3 ஆயிரத்து 500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு, ஏ-320, ஏ-321 போன்ற பெரிய பயணிகள் விமானங்களைத் தரையிறக்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.·