இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழாவும், பரிசளிப்பும்-2019 நிகழ்வு 04.07.2019 வியாழக்கிழமை பிற்பகல் 3மணியளவில் யாழ். திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க ஆராதனை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சோ. பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரத்தினரம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக பெரியார் சு.இராசரத்தினம் அவர்களின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து விருத்தினர்கள் கௌரவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அடுத்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர் உரை, இல்லக விளக்கு என்ற மலர் வெளியீடு என்பன நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பரிசில் வழங்கல், நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.