யாழ். சாவகச்சேரி மகளீர் கல்லூரியில் தகவல் தொழில்நுட்படத்துடன் கூடிய திட்டத்திற்குரிய திறன் வகுப்பறையை (Smart Classroom) மேம்படுத்தும் பணிகளுக்கு, சுவிஸ் நாட்டில் வதியும் புளொட் உறுப்பினர் சி.சில்வபாலன் (லெனின்) அவர்கள் ரூபாய் 120.000/- நிதியினை வழங்கியிருந்தார்.

அதிபர் லலிதா முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிதி வழங்கும் நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவத்திரை சிவநாதன், கோட்டக்கல்வி அதிகாரி திரு. நடராஜா ஒய்வுநிலை ஆசிரிய ஆலோசகருடன், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் யாழ். மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபனும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.