யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும், பரிசளிப்பு விழாவும்-2019 நிகழ்வு 04.07.2019 வியாழக்கிழமை காலை 9மணியளவில் கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ். இந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் சுப்பிரமணியம் முகுந்தன் அவர்களம், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான திருமதி ரஜினி கருணாகரன், ராஜரட்ணம் சாந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.