யாழ். ஊரெழு கலைவாணி முன்பள்ளியின் விளையாடி மகிழ்வோம்-2019 விளையாட்டுப் போட்டி நிகழ்வானது 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30அளவில் முன்பள்ளியின் மைதானத்தில் திரு. சி. இளங்கோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஓய்வுநிலை அதிபர் கவிமணி க.ஆனந்தராசா, ஊரெழு கிராம உத்தியோகத்தர் செ.சுதர்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more