யாழ். ஊரெழு கலைவாணி முன்பள்ளியின் விளையாடி மகிழ்வோம்-2019 விளையாட்டுப் போட்டி நிகழ்வானது 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30அளவில் முன்பள்ளியின் மைதானத்தில் திரு. சி. இளங்கோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஓய்வுநிலை அதிபர் கவிமணி க.ஆனந்தராசா, ஊரெழு கிராம உத்தியோகத்தர் செ.சுதர்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.கௌரவ விருந்தினர்காக கோப்பாய் பிரதேசசபை உறுப்பினர் இ.செல்வராஜா, சி.முகுந்தன், ச.மிரிகா ஆகியோருடன் முன்பள்ளி ஆசிரியைகளான ப.தயாரூபினி, க.கஜந்தா, த.வினோதினி, ந.சந்திரகலா ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.

தொடர்ந்து இறைவணக்கம், கழக கொடியேற்றம், முன்பள்ளி கீதம் இசைத்தல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், பாண்ட் வாத்திய அணிவகுப்பு, மாணவர் சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்று, பிரதம விருந்தினரால் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பரிசளிப்பு, விருந்தினர் உரை மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.