Header image alt text

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தும் வகையில் “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் கடந்த 06.07.2019 சனிக்கிழமை 108 பானைகளை வைத்து வருடாந்தப் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.

இந்த “108” பானைப் பொங்கல் விழாவினை ஆலய அறங்காவலர் குழுவுடன் இணைந்து சமூக வலைத்தள நண்பர்களும் ஒழுங்கு செய்திருந்தனர். இப் பொங்கல் விழாவில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் பொருளாளருமான கந்தையா சிவநேசன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், திரு. அருந்தவபாலன் மற்றும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் 166 பேரை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

குறித்த முகாமில் 36 பேர் தங்கியிருப்பதற்கான வசதிகளே காணப்படுவதால், இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதால், குறுகிய காலத்துக்குள் அவர்களை, அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

அமெரிக்காவின் சட்டத்தரணிகள் நிறுவனத்தின் கிளை அல்லது அதனுடன் தொடர்புயை வேறு எந்த நிறுவனத்தையும் இலங்கையில் நிறுவ அனுமதி வழங்கப்படவில்லை என நீதி அமைச்சர் தலாத அதுகோரல தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிறுவனம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என்றும் தலதா அத்துகோரல விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் – பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு கொட்டிலுடன் தீ வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக பேசாலை 7 ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பேசாலை கடற்கரையில் படகை நிறுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஒரு தொகுதி வலைகளுடன் குறித்த கண்ணாடி இழைப் படகு, கடற்கரையில் உள்ள தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. Read more

இரத்தினபுரி நகரத்தில் பிரதான பஸ் தரிப்பிடத்தை வீடியோவாக பதிவு செய்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமது செயற்பாடு குறித்து ஏற்றுக்கொள்ளும் வகையிலான காரணங்களை முன்வைக்காத நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரை கைதுசெய்ததாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறக்குவானை, உக்வத்த பிரதேசத்தை சேர்ந் 33 வயதுடைய நபர் ஒருவரும் கோகாலை, ஹேம்மாவத்தகம பகுதியை சேர்ந்த 49 வயதுடைய முஸ்லிம் பிரஜைகள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more