அமெரிக்காவின் சட்டத்தரணிகள் நிறுவனத்தின் கிளை அல்லது அதனுடன் தொடர்புயை வேறு எந்த நிறுவனத்தையும் இலங்கையில் நிறுவ அனுமதி வழங்கப்படவில்லை என நீதி அமைச்சர் தலாத அதுகோரல தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிறுவனம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என்றும் தலதா அத்துகோரல விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.