இரத்தினபுரி நகரத்தில் பிரதான பஸ் தரிப்பிடத்தை வீடியோவாக பதிவு செய்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமது செயற்பாடு குறித்து ஏற்றுக்கொள்ளும் வகையிலான காரணங்களை முன்வைக்காத நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரை கைதுசெய்ததாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறக்குவானை, உக்வத்த பிரதேசத்தை சேர்ந் 33 வயதுடைய நபர் ஒருவரும் கோகாலை, ஹேம்மாவத்தகம பகுதியை சேர்ந்த 49 வயதுடைய முஸ்லிம் பிரஜைகள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதான பஸ் தரிப்பிடம் மற்றும் நகரத்தை வேறு பகுதியில் இருந்து வந்த இருவர் நேற்று வீடியோ பதிவு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸாரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.