குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் 166 பேரை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

குறித்த முகாமில் 36 பேர் தங்கியிருப்பதற்கான வசதிகளே காணப்படுவதால், இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதால், குறுகிய காலத்துக்குள் அவர்களை, அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.