முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தும் வகையில் “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் கடந்த 06.07.2019 சனிக்கிழமை 108 பானைகளை வைத்து வருடாந்தப் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.

இந்த “108” பானைப் பொங்கல் விழாவினை ஆலய அறங்காவலர் குழுவுடன் இணைந்து சமூக வலைத்தள நண்பர்களும் ஒழுங்கு செய்திருந்தனர். இப் பொங்கல் விழாவில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் பொருளாளருமான கந்தையா சிவநேசன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், திரு. அருந்தவபாலன் மற்றும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.