Header image alt text

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன. விவாதங்கள் நிறைவடைந்ததும் மாலை 6.35 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. குறித்த பிரேரணைக்கு எதிராக அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரரணை தோல்வியடைந்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தது.

யாழ். சுன்னாகம் மயிலணி பகுதியில் மூன்று வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (08.07.2019) திங்கட்கிழமை இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியில் மேற்படி மூன்று வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், Read more

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் குறித்த யுவதி இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறித்த யுவதி படுகாயமடைந்திருந்தார். மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த யுவதி சுமார் 80 நாட்கள் சிசிக்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள பிரதேசத்தில் மீண்டும் புத்த விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருவதாக தென்கயிலை ஆதீனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் கருத்து தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை முதல் கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் அதனை அகற்றி அங்கு புத்த விகாரை அமைக்கும் பணி தொடர்வதாகவும் நேரடியாக அங்கு சென்று தாம் அதனை ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டபோது திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அங்கு ஒரு புத்த விகாரை அமைக்கும் பணியை ஆரம்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். Read more