Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றது. Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு மற்றும் மாலைத்தீவு இடையிலான பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக இவரது விஜயம் அமையவுள்ளது. இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு ஜூலை 16ஆம் திகதி தமது கடமைகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

18 வயதுக்குக் குறைந்த சுமார் 1 இட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்படுவார் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு இதற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.