ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்படுவார் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு இதற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.