யாழ். சுன்னாகம், கந்தரோடையில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும், நீர்வேலி கிழக்கு பன்னாலைப் பிரதேச இளைஞர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றுகாலை நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினரும், கோப்பாய் பிரதேசசபை உறுப்பினருமான இ.செல்வராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் பிரதேச அபிவிருத்திகள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தினார்.