Header image alt text

கடந்த 11.07.2019 வியாழக்கிழமை காலமான திருமதி ஜோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) அவர்களின் பூதவுடல் யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுகாலை 9மணியளவில் அமரர் திருமதி ஜோசப்பின் வேதநாயகம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் கள செயற்பாட்டாளராகவும், போராட்டத் தலைவர்களின் பாதுகாவலராகவும் இருந்த திருமதி ஜோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) அவர்கள் ஒடுக்குமுறைகளுக்கெதிரான பல்வேறு போராட்டங்களில் துணிச்சலுடன் பங்கெடுத்தவர். இவர் வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களின் மாமியாராவார்.
Read more

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் இந்து ஆலயங்கள், இந்து அறநெறிப் படசாலைகள் என்பவற்றை வலுப்படுத்தும் தெய்வீகச் சேவைத் திட்டத்தின் ஊடாக இந்து ஆலயங்களிற்குப் புனரமைப்பிற்கான நிதி வழங்கும் நிகழ்வு யாழ். நீராவியடி இலங்கைவேந்தன் மண்டபத்தில் இன்று (14.07.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், சைவப் பெரியார்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ் தேசியக் கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், Read more

கடந்த 11.07.2019 வியாழக்கிழமை இயற்கை எய்திய அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பூதவுடல் யாழ். ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் நேற்று 13-07-2019 சனிக்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று யாழ். ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அருட்தந்தை அமரர் ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். Read more

துயர் பகிர்வு

Posted by plotenewseditor on 14 July 2019
Posted in செய்திகள் 

துயர் பகிர்வு   – அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள்

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இன ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை காந்தீயம் அமைப்பின் மூலமாக வடக்கு கிழக்கில் குடியேற்றுவதில் மிகவும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றியதோடு, கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுடனும் கழகத்தின் ஏனைய தோழர்களுடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர்.

இலங்கையில் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்குதல்களுக்கும், இன ரீதியான வன்முறைகளுக்கும் எதிராக தீவிரமாக செயற்பட்டதோடு, அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி, தமிழ் மக்களுடைய முழுமையான விடுதலைக்காக தன்னுடைய அர்ப்பணிப்பான சேவையினை ஆற்றிவந்தார்.
Read more

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம் 13.07.2019 முற்பகல் பண்ணாகத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல், அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல், மலர்தூவி அஞ்சலி செலுத்தல் என்பன இடம்பெற்றன. மேற்படி அஞ்சலி நிகழ்வில் நாவலியூர் கௌரிகாந்தன், பேராசிரியர் சிற்றம்பலம், பஞ்சாட்சரம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 30ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட காரியாலயத்தில் 30ஆவது வீரமக்கள் தினம் இன்றுகாலை 10மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பனர்களான பொ.செல்லத்துரை, ந.ராகவன், கிருபைராஜா, கமலநாதன், ஞானப்பிரகாசம் ஆகியோரும், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

30ஆவது வீரமக்கள் தினத்தின் இரண்டாம் நாளான இன்றும் வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு உமாமகேஸ்வரன் இல்லத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட தாக சாந்தி நிலையமும் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது. Read more