தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம் 13.07.2019 முற்பகல் பண்ணாகத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல், அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல், மலர்தூவி அஞ்சலி செலுத்தல் என்பன இடம்பெற்றன. மேற்படி அஞ்சலி நிகழ்வில் நாவலியூர் கௌரிகாந்தன், பேராசிரியர் சிற்றம்பலம், பஞ்சாட்சரம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.