கடந்த 11.07.2019 வியாழக்கிழமை இயற்கை எய்திய அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பூதவுடல் யாழ். ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் நேற்று 13-07-2019 சனிக்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று யாழ். ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அருட்தந்தை அமரர் ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.