தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 30ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட காரியாலயத்தில் 30ஆவது வீரமக்கள் தினம் இன்றுகாலை 10மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பனர்களான பொ.செல்லத்துரை, ந.ராகவன், கிருபைராஜா, கமலநாதன், ஞானப்பிரகாசம் ஆகியோரும், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.