தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

30ஆவது வீரமக்கள் தினத்தின் இரண்டாம் நாளான இன்றும் வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு உமாமகேஸ்வரன் இல்லத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட தாக சாந்தி நிலையமும் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது.