Header image alt text

யாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல் நாட்டும் வைபவம் இன்று பிற்பகல் 12.30மணியளவில் சுன்னாகம் தபாலக வளாகத்தில் நடைபெற்றது.

சுன்னாகம் நகர அபிவிருத்தி சபையின் தலைவர் சி.குமரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புதிய தபால் நிலையத்திற்கான அத்திபாரக் கல்வினை நாட்டிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண துணை அஞ்சல் அதிபர் மதுமதி வசந்தகுமார், சுன்னாகம் தபால்நிலைய தபாலதிபர் திருமதி மஞ்சுளா ராஜராஜன், உடுவில் பிரதேச செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ். கந்தரோடை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா 15.07.2019 காலை 9மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் அழைப்பையேற்று நிகழ்வின் பிரதம விருந்தினராக மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் விருந்தினர்களாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஸ்கந்தவரோதயன் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கோரிக்கைக்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட விசேட நிதியான 5கோடியே 80லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கல்லூரியின் கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லினை பிரதமர் அவர்கள் நாட்டி வைத்தார். இதனையடுத்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. Read more

யாழ். சுன்னாகம் சூறாவத்தை முத்துமாரியம்மன் கோவில் பின்விதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (14.07.2019) இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். சுன்னாகம் வாணாப்புலம் வீதி நேற்று (14.07.2019) மாலை திறந்துவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது. நேற்றைய வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more