யாழ். சுன்னாகம் வாணாப்புலம் வீதி நேற்று (14.07.2019) மாலை திறந்துவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது. நேற்றைய வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.