Header image alt text

யாழ். கோப்பாய் எம்.பி.பி.எஸ் லேன், கலம்பரை வீதி ஆகிய இரண்டு வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக மேற்படி இரண்டு வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், செந்தூரன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன் Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம் திகதிமுதல் நேற்று 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டது.

30ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதி நாளான நேற்றும் வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு உமாமகேஸ்வரன் இல்லத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட தாக சாந்தி நிலையமும் நேற்றுவரை தொடர்ந்து நடாத்தப்பட்டது. Read more