Header image alt text

புளொட் அமைப்பின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் கார்த்திகேசன் நந்தகுமார் அவர்கள் தனது ஆடி மாதத்திற்கான மாதாந்த கொடுப்பனவு தொகையான 15 000/- ரூபாவினை வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் முன்பள்ளியின் மின் இணைப்பிற்காக புளொட்டின் 30வது வீரமக்கள் தினத்தினை முன்னிட்டு வழங்கியிருந்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களான செல்வராஜா டினோஸா, விஜிந்தன் நீரஜா ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் வவுனியா நகர சபை உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் யோகராஜா, Read more

சுவிஸ்லாந்தில் கழகத் தோழர் சிவாவின் முயற்சியில் கழகத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட உள்ளுரர் தபால் பாவனைக்கான தபால்தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருக்கக்கூடிய எங்கள் தோழர்களுடைய இத்தகைய முயற்சிகள் நிச்சயமாக இங்குள்ள தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கின்றது.

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு பல் ஊடக எயிறி (Mulltimedia Projector) ஒன்றினை கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளரும்,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் வவுனியா நகர சபை உறுப்பினரும், வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலய ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களினால் இன்றையதினம் (18.07.2019) பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின்போது அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன்போது மேற்படி பல்லூடக எயிறி கல்லூரி முதல்வர் பொ.சிவநாதன், விஞ்ஞான ஆசிரியர் பி.தற்பரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
Read more

திருகோணமலை கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு பௌர்ணமி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை (16) வழிபடச் சென்ற பக்தர்கள்மீது இனந்தெரியாதவர்கள் தேநீர் சாயங்களை ஊற்றிய சம்பவம் தொடர்பில் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேநீர் சாயங்களை ஊற்றியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. Read more

விழிநீர் அஞ்சலி!

Posted by plotenewseditor on 18 July 2019
Posted in செய்திகள் 

விழிநீர் அஞ்சலி!

திருகோணமலை மூதூர் கங்குவேலியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட அழகுராஜா அன்னப்பிள்ளை அவர்கள் இன்று (18.07.2019) வியாழக்கிழமை காலமானார் என்பதை மிகவும் துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார் கழக உறுப்பினர் தோழர் உமாபதி அவர்களின் தாயாராவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில் பிரான்ஸில் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

காலம்:- 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணி முதல்,
இடம்:- 21 Rue Villot, 93120 la courneuve

தொடர்புகட்கு:0033 753265173, 0033 605750086, 0033 751179646

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)