புளொட் அமைப்பின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் கார்த்திகேசன் நந்தகுமார் அவர்கள் தனது ஆடி மாதத்திற்கான மாதாந்த கொடுப்பனவு தொகையான 15 000/- ரூபாவினை வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் முன்பள்ளியின் மின் இணைப்பிற்காக புளொட்டின் 30வது வீரமக்கள் தினத்தினை முன்னிட்டு வழங்கியிருந்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களான செல்வராஜா டினோஸா, விஜிந்தன் நீரஜா ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் வவுனியா நகர சபை உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் யோகராஜா, தோழர்களான ராஜன், சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பெற்றோர்களும், ஊர்ப் பெரியோர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.