வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு பல் ஊடக எயிறி (Mulltimedia Projector) ஒன்றினை கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளரும்,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் வவுனியா நகர சபை உறுப்பினரும், வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலய ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களினால் இன்றையதினம் (18.07.2019) பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின்போது அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன்போது மேற்படி பல்லூடக எயிறி கல்லூரி முதல்வர் பொ.சிவநாதன், விஞ்ஞான ஆசிரியர் பி.தற்பரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.