Header image alt text

யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று (19.07.2019) வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திருமதி நர்மதா பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தேசியக் கொடியேற்றல், பாடசாலைக் கொடியேற்றல் என்பன இடம்பெற்றன. Read more

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்காது என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தினூடாக தெளிவாக விளங்கி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே சித்தார்த்தன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென பலர் நினைத்தார்கள். அதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் கூட செய்யப்பட்டிருந்தன.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசியல் நிர்ணய பேரவை அமைக்கப்பட்டு அதற்குள் 4,5 குழுக்கள் இருந்தன. அதில் ஒன்றில் தலைவராகக் கூட இருந்தேன். இவ்வாறு பல முயற்சிகள் எடுக்கப்படடிருந்த காலத்தில் கூட எங்களைப் பொறுத்தவரை நியாயமான தீர்வுகள் எட்டப்படாவிட்டாலும், அவற்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கினோம்.

Read more

யாழ். சுன்னாகம் தட்சணாவடலி முதலாம் ஒழுங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 6.30மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், இ.கெங்காதரன், குணேஸ் மற்றும் ஊர்ப் பெரியோர்களும், பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலைய குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 6.00மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், இ.கெங்காதரன், குணேஸ் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

திருகோணமலை மாவட்டத்தின் கன்னியாவில் மதத் தலைவர் மற்றும் ஆலய உரிமையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்குதல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,

புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது கன்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க தொடர்ந்தும் அனைவரும் உழைப்போம் என்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளில் அரசாங்கம் இரு விதமான கருத்தை அல்லது இரு முகத்தைக் காட்டுகின்றதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read more

யாழ். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி முதலாம் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 5.30மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், இ.கெங்காதரன், குணேஸ் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். சுன்னாகம் பூதவராயர் முதலாம் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 5.00மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் இ.கெங்காதரன், குணேஸ் மற்றும் ஊர்ப் பெரியோர்களும், பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more