புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் உடுவில் பிரதேச செயலாளர் ஜெயகாந்தன், பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோர்க்குமிடையேயான விசேட கூட்டம் ஒன்று இன்றுமுற்பகல் உடுவில் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இச் சந்திப்பில் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.